27.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மின்னல் தாக்கியதில் கணவன் மனைவி பலி!

அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தினை சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த லோக நாயகம் யோகேஸ்வரன் வயது46 மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா வயது 46 ஆகியோரே இவ்விதம் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இவர்கள் விவசாயிகளாவர் .

இவர்களுக்கு மூன்று பிள்ளைகளுண்டு இவர்களது சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினர் சாகாமம் கற்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் நிலக்கடலை செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது பாரிய இடி மின்னல் ஏற்பட்டது. அதற்குப் பயந்து ஓடி வருகையில் மின்னல் தாக்கி ஸ்தலத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles