மீகொட பொருளாதார நிலையத்தில் கடை உரிமை யாளர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று அடை யாளம் காணப்பட்டதாகச் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது, மீகொட பொருளாதார நிலையத்திலுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அத்தோடு கொ ரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட சுமார் 15 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.