Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
மாரவில முதுகட்டுவ பகுதியில் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்று காணாமல் போயிருந்த ஜப்பானிய பிரஜை உள்ளிட்ட 4 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.கடற்படையினரும் குறித்த பகுதியில் உள்ள மீனவர்களும் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின்போது அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த ஜப்பான் பிரஜை உள்ளிட்ட 6 பேர் மீன்பிடிப்பதற்காக படகொன்றில் கடலுக்கு சென்றுள்ளனர். இதன்போது, நேற்று பெய்த அதிக மழை காரணமாக குறித்தப் படகு கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இதனையடுத்து, படகை செலுத்தியவர் உட்பட இருவர் பாதுகாப்பாக கரைக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த 4 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளன