முச்சக்கர வண்டி சாரதிக்கு பழச்சாறு பானம் கொடுத்து நகை, பணம் திருட்டு!

0
162

பழச்சாறு பானம் கொடுத்து முச்சக்கர வண்டி சாரதியை மயக்கமடையச் செய்து நகை, பணம் என்பனவற்றை இளம் ஜோடி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று மீரிகமவில் பதிவாகியுள்ளது.

மீரிகம கல்எலிய பகுதியில் வாடகை முச்சக்கர வண்டியில் ஏறிய இளம் ஜோடி உறவினர் வீட்டுக்கு செல்லவேண்டும் என சாரதியிடம் சொல்லியுள்ளனர்.

பயணத்தை ஆரம்பித்து சிறிது தூரத்தில் மேலும் ஒருவரை வண்டியில் ஏற்றுக்கொண்டனர். பின்னர் வண்டியை கடை ஒன்றின் முன் நிறுத்துமாறு கூறிவிட்டு கடைக்கு சென்று கேக்கும் 2 பழச்சாறு பானங்களையும் வாங்கி வந்தனர். இதில் ஒரு பானத்தை எனக்கு கொடுத்தனர். அதன் பின்னர் சிறிது தூரம் பயணித்ததும் வாகனத்தை நிறுத்த சொன்னார்கள். ஆனால், அதன் பின்னர் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது என கூறுகிறார் பாதிக்கப்பட்ட சாரதி.

விடியற் காலையில் தான் நான் விழித்துக் கொண்டேன். அதற்கு பிறகு நீண்ட தூரம் தவழ்ந்து போனேன். ஒரு வீட்டை அடைந்தேன். அவர்கள் எனக்கு உதவினார்கள். எனது வீட்டாருக்கு தகவல் கொடுத்தார்கள்.

நிச்சயதார்த்த மோதிரம், சங்கிலி, பென்டன் ஆகிய தங்க நகைகளும் பணம் மற்றும் கடிகாரம் என்பனவற்றை குறித்த குழுவினர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக சாரதி மேலும் தெரிவித்துள்ளார்.

சாரதி முச்சக்கர வண்டியுடன் பாழடைந்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.