முட்டைகளை நிறுத்து விற்பனை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது குறித்து கவனம்!

0
116

முட்டைகளை நிறுத்து விற்பனை செய்வதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்  செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பல்பொருள் அங்காடிகள் மற்றும்  சதொச நிலையங்களுக்கு விநியோகிப்படுவதனால்  இரண்டு கட்டுப்பாட்டு விலை வகைகள் அவசியமில்லை எனவும், இதன் காரணமாக ஒரு வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெள்ளை முட்டை கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 880 ரூபாவாகவும், சிவப்பு முட்டை கிலோ ஒன்றுக்கு 920 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டிருந்தது.