முன்னாள் அமைச்சர் கெஹெலிய நீதிப் பேராணை மனு தாக்கல்

0
76

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்துள்ள நீதிப் பேராணை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
தமக்கு எதிராக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் வழங்கப்பட்ட உத்தரவை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது.
தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி கெஹெலிய ரம்புக்வெல்ல நீதிப் பேராணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் தீர்மானித்துள்ளது.