26.2 C
Colombo
Wednesday, October 9, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு- 7, விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்திற்கு முன்பாகச் சென்று மஹிந்தவுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ​பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு வாரத்திற்குள் கண்டுபிடிக்க முடியாத வகையில் கொலை செய்து விடுவேன் என்று கூறி ரவுடித்தனமாக நடந்து கொண்ட முன்னாள் இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நபர் ஒருவர் ரவுடித்தனமாக நடந்து கொள்வதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸ் குழு சந்தேக நபரை கைது செய்துள்ளது.

பமுனுகம கிரிவெல ஹொரபவிட்ட, பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் தனது சகோதரியின் கிருலப்பனை வீட்டில் தங்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles