மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவால், தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து
பாலர் பாடசாலைகளின் அபிவிருத்திக்கென நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் நிதி ஒதுக்கீட்டிற்கான ஆவணம் கையளிக்கும் நிகழ்வு இன்று, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை மண்டபத்தில்
நடைபெற்றது.
கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 31 முன்பள்ளிகளுக்கு
நாடாளுமன்ற உறுப்பினரால், நிதி ஒதுக்கீட்டிற்கான ஆவணம் கையளிக்கப்பட்டது.