24 C
Colombo
Saturday, November 9, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முல்லைத்தீவு கரும்புள்ளியான் குடி நீர் திட்டம் தொடர்பில் அறிக்கை சமர்பிக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு கரும்புள்ளியான் குடி நீர் திட்டத்திற்கு, உலக வங்கியினால் ஒதுக்கப்பட்ட ஆயிரம் மில்லியன் ரூபா நிதி திருப்பட்ட விடயம் தொடர்பில், தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளர் ஏக்கநாயக்கவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
கரும்புள்ளியான் குடி நீர் திட்டத்திற்கு, உலக வங்கியினால் ஒதுக்கப்பட்ட நிதி, அதிகாரிகளால் தென் பகுதிக்கு மாற்றப்பட்டு, கரும்புள்ளியான் குடி நீர் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, பொது மக்களால், எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
எனவே, இது தொடர்பில் வரவு செலவு திட்டத்திற்கு முன் இடம்பெற்ற நிதி ஆலோசனை குழு கூட்டத்தில், கடந்த 15 ஆம் திகதி, நான், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
அதனைத்தொடர்ந்து, 16 ஆம் திகதி அன்று, நாடாளுமன்றத்தில், ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு கொண்டு சென்றேன்.
இதில், என்னோடு இணைந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் ரிசாட் பதியூதீன் ஆகியோர், விடயத்தை பேசியிருந்தார்கள்.
தொடர்ந்து, கரும்புள்ளியான் விடயம் தொடர்பில் பேசுவதற்கு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த கூட்டத்தில், அதிகாரிகள் கருத்து தெரிவித்த போது, கரும்புள்ளியான் குடி நீர் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 15 மில்லியன் ரூபா திறைசேரிக்கு மாற்றப்பட்டதாகவும், குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த காலம் போதாது என்பதோடு, கொரோனா காரணமாகவும், திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்தனர்.
நாட்டில், கரும்புள்ளியான் கிராமத்தில் மட்டும் தானா, கொரோனா தாக்கம் ஏற்பட்டது எனக் கேள்வி எழுப்பிய நான், எனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்து விட்டு, கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளியேறினேன்.
தொடர்ந்து, ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க வவுனியா வந்த போது, அவரது கவனதிற்கு கொண்டுசென்ற போதே, அவர் தனது செயலாளருக்கு, விடயத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles