மேலும் 6 பேரின் உயிரை பலியெடுத்த கொரோனா தொற்று!

0
128

இலங்கையில் கொவிட் தொற்றின் காரணமாக மேலும் 6பேர் மரணமாகினர்.

இவர்களின் இறப்புக்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேற்று உறுதிசெய்துள்ளார்.

இறந்தவர்களில் 5 பெண்களும் ஒரு ஆணும் அடங்குகின்றனர்.

இதில் 30 அகவைக்குட்பட்ட பெண் ஒருவரும், 30க்கும் 60க்கும் உட்பட்ட அகவையைக்கொண்ட ஆண் ஒருவரும், 60 அகவைகளுக்கு மேற்பட்ட 4 பெண்களும் உள்ளடங்கியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.