மேல்மாகாணத்தில் ஊரடங்கினை நீடிக்கும் முடிவிற்கு சுகாதார பரிசோதகர்கள் வரவேற்பு

0
187

மேல்மாகாணத்தில் ஊரடங்கினை நீடிக்கும் தீர்மானத்தினை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண இதனை வரவேற்றுள்ளதுடன் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் விடுக்கும் உத்தரவுகள் அறிவுறுத்தல்களை பொதுமக்கள் பின்பற்றவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பொதுமக்கள் பெருமளவில் ஒன்று கூடுவதையும் வெளியில் நடமாடுவதையும் தவிர்க்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை தொடர்ந்தும் மீறினால் அதனால் ஆரோக்கியமான நிலையில் உள்ள மக்களும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகும் என இது நாட்டின் சுகாதார துறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.