மேல் மாகாணத்தில் அரச ஊழியர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்ய அனுமதி!

0
281

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த, மேல் மாகாணம் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள அரசு நிறுவனங்களில் பணிப்புரியும் ஊழியர்கள் இன்று முதல் வீட்டிலிருந்தவாறு வேலை செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அது தொடர்பான சுற்றறிக்கை ஜனாதிபதியின் செய லாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர சகல அமைச்சர்களுக்கும் மற்றும் இராஜாங்க அமைச்சர் செயலாளர்கள், மாகாணங் களின் தலைமைச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர் கள் , திணைக்களத்தின் தலைவர்கள், பொது நிறுவனங் கள், நீதித்துறை சபைகளின் தலைவர்கள், பொது முகாமையார் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஒவ்வொரு நிறுவனமும் தொலைதூரத்தில் செய்யக்கூடிய பணிகளையும், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர் களை யும் தீர்மானிக்கும் அதிகாரம் அந்த அந்த நிறுவனங் களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தீர்மானிக்கப்பட்டதும், தொடர்புடைய  கோப்பு கள் மற்றும் உபகரணங்கள் முறையான அனுமதியுடன் ஊழியர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை யில் பொது மக்களுக்கு நேரடியாகச் சேவை களை வழங்க அனைத்து நிறுவனங்களும் இணையத் தளத்தை உரு வாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுயதொழில் புரியும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யச் சொல்லும் அதிகாரம் நிறுவனத்தின் தலை வருக்கு உண்டு, ஆனால் கொரோனா தொற்றுக்கான அறிகுறி சிறிதளவேனும் காணப்பட்டால் குறித்த ஊழி யருக்கு எந்தப் பணியும் வழங்கக் கூடாது.துறைமுகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக் கைகள், சுங்கம், நீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட அத்தி யாவசிய சேவைகள் தடையின்றி மேற்கொள்ளவேண்டும் என்றும் ஜனாதிபதி செயலாளர் தனது சுற்றறிக்கையில் நிறுவனத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.