ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறிய 454 பேர் நாட்டின் பல பகுதிகளில் கண்டறிப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பண்டாரவளை, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், தங்காலை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் சுற்றுலா விடுதிகளில் தங்கியிருந்த நபர்களே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்..
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு அதற்கு முன்னர் கடந்த 29 ஆம் மற்றும் 30ம் திகதிகளில் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய நபர்களை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.