மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 42 அலுவலக ரயில்கள் இன்று தொடக்கம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
பிரதான ரயில் மாரக்கத்திலும், களனிவெளி – புத்தளம் – கரையோர ரயில் மார்க்கங்களிலும் சேவைகள் நடத்தப்படும். பயணிகள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.
அலுவலக ரயில் சேவைகள் நட்ததப்படுகின்றபோதும் தூர இடங்களுக்கான ரயில் சேவைகளும், நகர்சேர் கடுகதி ரயில் சேவைகளும் நடத்தப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் பஸ் மற்றும் ரயில் வண்டிகளில் பயணிகளை ஏற்றுவதற்கோ இறக்குவதற்கோ அனுமதியில்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.