பேலியகொட மீன்சந்தைநோயாளிகளுடன் தொடர்புபட்ட பலர் வாழ்வதாலும் மக்கள் அடர்த்தியாக வாழ்வதாலுமே மருதானை தெமட்டகொடை கொட்டாஞ்சேனை மோதரை போன்றபகுதிகளில் ஊரடங்கினை பிறப்பித்ததாக இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இந்த பகுதிகளில் பேலியகொட மீன் சந்தை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொண்ட பலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என இராணுதளபதி தெரிவித்துள்ளார்.
நாடாளாவியரீதியில் ஊரடங்கினை பிறப்பிப்பதற்கான அவசியமில்லை, பாதிக்கப்படும் இடங்களை அடிப்படையாக வைத்தே ஊரடங்கினை அறிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
காலி அளுத்கம பேருவள போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவு நோயாளர்கள் இனம்;காணப்படுவதால் அடுத்த 24 மணித்தியாலங்கள் மிகவும் முக்கியமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.