கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜவிகம பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நான்கு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
கருவலகஸ்வெவ ரஜவிகம பகுதியைச் சேர்ந்த நான்கு வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற நேற்றைய தினம் (30) மாலை 6.30 மணியளவில் உறவினர் ஒருவர் வீதியில் பயணித்த குறித்த நான்கு வயது குழந்தை மீது காட்டு யானை ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குழந்தை அங்கிருந்தவர்களால் உடனடியாக ஆனமடுவ வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதிலும், அக்குழந்தை அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துளள்தாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் சடலம் ஆனமடுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கருவலகஸ்வெவ பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.