கிராமிய பொருளாதார அபிவிருத்தி குழுக் கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி நடைபெறுகிறது.
கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்டங்களை உள்ளடக்கியதாக இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் குறித்த கூட்டம் ஆரம்பமாகி இடம்பெறுகிறது. குறித்த கூட்டத்தில் அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், டக்லஸ் தேவானந்தா, யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர், யாழ், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள், சுகாதார திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலோடு குறித்த கூட்டம் ஆரம்பமாகி நடைபெறுகிறது.
நாட்டில் உள்ள கொரோனா தொற்று அச்சநிலைமையில் மாகாணங்களுக் கிடையிலான போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் கூட்டம் நடைபெறுகிறது. அத்தோடு யாழ் மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.