28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் அம்மம்மாவும் உயிரிழப்பு!!

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது அம்மம்மாவும் உயிரிழந்தார்.


இந்தச் சம்பவம் உடுவில் ஆலடிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது.
30 வயது சௌந்தரராஜன் சகிதரன், அவரது அம்மம்மா மாணிக்கம் நாகேஸ்வரன் (வயது-70) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்தனர்.


இளம் குடும்பத்தலைவரை அவரது மனை இன்று அதிகாலை தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளார். அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து அம்மம்மாவிடம்; கூறியுள்ளார். அவர் திருநீறு பூசியுள்ளார்.

இந்நிலையில் உடனடியாக யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் அவர் உயிரிழந்துவிட்டார். அந்தச் செய்தியை அறிந்த அதிர்ச்சியில் அவரது அம்மம்மாவும் மயங்கிச் சரிந்துள்ளார். அவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.


இச்சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார். சடலங்கள் உடகூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles