29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்கிறார் அரச அதிபர்!

யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது எனினும்  உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என யாழ்  அரசாங்க அதிபர் க.ம கேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் கடல் நீர் உட்புகுந்த நிலைமை தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

கடல் நீர் உட்புகுந்த  சம்பவம் யாழ் கல்லுண்டாய்,ஊர்காவற்துறை,குருநகர், நாவாந்துறை பிரதேசத்தில் உணரப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்திற்கு தகவல் கிடைத்திருந்தது   அதனைஉடனடியாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு அறிவித்திருக்கிறோம் அதேபோல் நான் நேரடியாக அப்பகுதிக்கு சென்று அந்த இடத்தை பார்த்து அந்தவிடயம் தொடர்பாக ஆராய்ந்துள்ளேன் 
இது  கல்லுண்டாய் பகுதி  உட்பட யாழ் மாவட்டகரையோர பகுதிகள் சிலவற்றில் இந்த கடல் நீர் உட்புகுதல்  அவதானிக்கப்பட்டுள்ளதுஏற்கனவே இருக்கின்ற உவர்நீர் கட்டுகள் சேதமடைந்ததன் காரணமாகவும் நீர் உட்புகுந்திருந்திருக்கலாம்
 அப்பகுதி மக்கள் இது தொடர்பில் தகவல் தெரிவிக்கையில் இது ஒரு புதிதான விடயமாக காணப்படுகிறது தங்களுக்கு  ஒரு புதிதானஅனுபவமாக அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் 
ஆகவே இந்த விடயம் பற்றி அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம் அப்பகுதி மக்கள்  கூறியதன் படி முழு போயா தினத்திற்கும்  இவ்வாறான இயற்கையான செயற்பாடு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் இருந்தபோதிலும் இது பற்றி தொடர்ச்சியாக  ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன 
  உண்மையாக ஏன் இவ்வாறு எதற்காக  கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனினும் இதற்கு உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை இந்த சம்பவம்  எமக்கும் ஒரு புதிய விடயமாக காணப்படுகிறது தொடர்பில் நாங்கள் அனர்த்த முகாமைத்து நிலையத்தினரிடம் அறிவித்திருக்கின்றோம் 
வடக்கு மாகாணத்தில் இந்த இவ்வாறான சம்பவம்யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக உணரப்பட்டு ள்ளது எனவே இதுதொடர்பில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles