யாழில் மேலும் அறுவருக்கு தொற்று உறுதி !

0
649

வடக்கு மாகாணத்தில் கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் இன்று எண்மருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு பட்டவர்களே தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் ஆறு பேர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவர் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் வேலணை, நல்லூர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவில் இருவேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேலியகொட சென்றுவந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பு பட்டவர்கள் முல்லைத்தீவில் மீன்பிடிச் சங்கச் சமாசம் ஒன்றிலும் ஏனையவர்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களில் கொரோனா அறிகுறிகளுடன்காணப்பட்ட இருவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.