28.7 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் 459குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

யாழ்மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்திக் உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்

தற்போதுள்ள யாழ் மாவட்ட நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை  மேலும் அதிகரித்திருக்கின்றது இந்நிலையில் மேலும் 6 பேருக்கு நேற்று தொற்று  உறுதி செய்யப்பட்டிருக்கின்றது

 அதன்படி தற்போது யாழ் மாவட்டத்தில் மொத்தமாக 14 பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள்

அண்மையில் 26 ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவருக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது. அவர் சென்ற இடங்கள் தற்பொழுது முடக்க நிலமைக்கு உள்ளாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன அதே நேரம் அவருடன் தொடர்பு கொண்டவர்களும் இனங்கான கநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன  யாழ் நகரப் பகுதியில்  அவர் சென்று வந்த கடைகள் 4 கடைகளுக்கு மேல் மூடப்பட்டுள்ளது அதேபோல அவர் சென்ற உணவகம் சிகை அலங்கார நிலையம் போன்றனவும் மூடப்பட்டுள்ளது.
 மேலும் பொதுமக்கள் நடமாட்டங்களை குறைத்து அதே போல அவர்கள் செல்லும் இடங்கள் தொடர்பான விவரங்களை வெளிப்படுத்த வேண்டும்
குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் அவர்களுடைய வீடுகளிலேயே  இரண்டு வாரங்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு பிற்பாடு வெளியில் செல்லலாம்
 வெளியேபோவது மிக ஆபத்தான விடயம் தற்போது வடக்கில் தொற்றுஅதிகரிப்பதற்கு சில வெளி  மாவட்டத்திலிருந்து வருவோரின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணமாக இருக்கலாம் அதே போல் வெளி மாவட்டத்திலிருந்து யாழ் மாவட்டத்திற்கு வருவோர் கட்டாயமாக அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் தமது பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்

சமூக இடைவெளி மற்றும் முக கவசம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் செயற்படவேண்டும் தற்பொழுது கடைகள் வர்த்தக நிலையங்களை பொறுத்தவரைக்கும் அவர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கியிருக்கிறோம் 
கூடுமான வரைக்கும் அங்காடிவியாபாரங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து வந்து அங்காடி வியாபாரம் செய்பவர்கள் தற்காலிகமாக தமது வியாபாரத்தை நிறுத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles