யாழ். கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு

0
102

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா 20204 கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் கவின்ஜா நவஜீவா தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) எழிலரசி அன்டன் யோகநாயகம் கலந்து கொண்டிருந்தார். அத்துடன் சிறப்பு விரந்தினராக வட மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் அ.ரவீந்திரன் கலந்து கொண்டிருந்ததுடன் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபர் பெ. வசந்தன் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து இறைவணக்கத்டன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.