‘யுக்திய’ நடவடிக்கை தொடரும் – பாதுகாப்பு அமைச்சர்

0
73
ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடன் ‘யுக்திய’ நடவடிக்கை தொடரும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.பண்டாரவளை சமூக பொலிஸ் பிரிவினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.யுக்திய நடவடிக்கையானது சர்வதேச அழுத்தங்கள் உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்த அமைச்சர் , இந்த நடவடிக்கையை நிறுத்துவதற்கு தாம் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், தான் பொது பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் காலத்தில், இலங்கை மக்களுக்கான தனது கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், சர்வதேச சமூகத்தை மகிழ்விப்பதற்காக அல்ல என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.‘யுக்திய’ நடவடிக்கையானது நாட்டிற்குள் இருந்தும் சவால்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்த அமைச்சர் பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்த நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டார்.போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றக் கும்பல்களை ஒழிப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சபதம் செய்தார்.இந்த சந்திப்பின் போது பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பேசுகையில், ஒன்றரை மாதங்களுக்குள் ஹெரோயின், ஐஸ் மற்றும் ஏனைய ஆபத்தான போதைப்பொருட்களை பொலிஸ் படையினால் ஒழிக்க முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.