ராகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இந்த பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட 98 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதாரப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.