28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடக்கில் இன்று ஐவருக்கு தொற்று

வடமாகாணத்தில் இன்று 5 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அத்தோடு நாட்டில் மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியையடுத்து யாழ்ப்பாணத்தில் 6 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் இடையே கோரோனா தொற்று பரவியதையடுத்து புங்குடுதீவைச் சேர்ந்த பெண் ஒருவர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டார்.
அவர் பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான இ.போ.ச பேருந்து நடத்துனருக்கு கோவிட் – 19 நோய் ஏற்பபட்டது.
அத்தோடு வவுனியா – நெடுங்கேணி வீதிச் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் இடையே ஏற்பட்ட கோரோனா வைரஸ் தொற்றால் சாவகச்சேரி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பொறியியலாளர்கள் இருவர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டனர்.
பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனத்தில் சென்று திரும்பிய குருநகர் மற்றும் பருத்தித்துறையைச் சேர்ந்த இருவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மினுவாங்கொட – பேலியகொட கோரோனா பரவல் கொத்தணியையடுத்து யாழ்ப்பாணத்தில் 6 பேர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, மன்னாரில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் இன்று 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் மற்றையவர் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திலும் கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள்.
அத்தோடு பேலியகொட மீன் சந்தைக்கு கூலர் வாகனத்தில் சென்று திரும்பிய குருநகர், பருத்தித்துறை மற்றும் மன்னார் ஆகிய இடங்களைச் சேர்ந்த மூவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டமை இன்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட தகவலின் அடிப்படையில் சுகாதார அதிகாரிகளால் கடந்த வெள்ளிக்கிழமை சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டவர்கள். அவர்களில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்ட நிலையில் இன்று கோரோனா தொற்று உள்ளமையை உறுதி செய்து பிசிஆர் அறிக்கை கிடைத்துள்ளது.
இதேவேளை, பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று திரும்பிய பலர் வடக்கு மாகாணத்தில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் இருவருக்கு மட்டுமே கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய சிலருக்கு தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் கூறினர்.
கோரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தவர்கள் வீடுகளில் தொடர்ந்து சுயதனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களிடம் 14 நாள்களின் பின்னர் மீளவும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles