வடமராட்ச்சி – பருத்தித்துறை புனித நகர் பகுதியில் இன்று (07) மாலை வெடிக்காத நிலையில் மோட்டார் வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜெ 406 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள சோதிலிங்கம் மங்கையற்கரசி என்பவருடைய வீட்டிலேயே குறித்த வெடிபொருள் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
தென்னை மரத்திற்கு பாத்தி வெட்டும் போது பழைய 120 mm மோட்டர் வெடிபொருள் வெடிக்காத நிலையில் தென்பட்டுள்ளது.
உடனடியாக கிராம உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கப்பட்டு, கிராம உத்தியோகத்தர் மூலம் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, குறித்த இடத்திற்கு வருகைந்த இராணுவத்தினரால் மோட்டார் வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.