27.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றிய 30 வது வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!

வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய 30 வருட நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!

1990 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களினால் வடக்கிலிருந்த முஸ்லிம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதன் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது 

தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக மிகவும் அமைதியான முறையில் குறித்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது 

நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த யாழ்முஸ்லிம் மக்கள்.

இன்றுடன்  வடக்கிலிருந்து வலுக்கட்டாயமாக  முஸ்லீம் மக்களைவெளியேற்றி 30 வருடங்கள் ஆகின்றது 
எனினும் தற்போது மீண்டும் நாம் மீள்குடியேறி முகாம் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றோம் எனினும் எம்மை பொறுத்த வரைக்கும் கடந்த 30 வருடங்களாக நாங்கள் பட்ட இன்னல்கள் சொல்லில் அடங்காதவை 1990ஆண்டு நடந்த சம்பவம் ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் ஆகவே நாங்கள் கருதுகின்றோம் 
எனினும் தற்போது புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி பீடமேறியுள்ள இலங்கை அரசாங்கமானது இனியாவது வடக்கு முஸ்லிம் மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் வாழ்வாதார உதவிகள் தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும் 

தமிழர் முஸ்லிம் சிங்களவர் என்ற பிரிவினை இல்லாது அனைத்து மக்களும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் ஒன்றிணைவோம் எனவும் தெரிவித்தனர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles