வர்த்தக நிலையமொன்றிலிருந்து மீட்கப்பட்ட வாக்காளர் அட்டைகள்

0
52

புத்தளத்தில் தபால் உத்தியோகத்தர் ஒருவர் 145 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் புத்தளம் மாவட்ட தபால் அத்தியட்சகர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தார்.

இந்நிலையில் விநியோகிக்கப்படாத வாக்காளர் அட்டைகள் தபால் அத்தியட்சகரினால் வர்த்தக நிலையமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.