திருகோணமலையில் வலம்புரி சங்கை விற்பனைசெய்ய முயன்ற இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளளனர்.
முல்லைத்தீவு விசேட அதிரடிப்படை முகாம் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சீனன்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை – கண்டி வீதி, கப்பல்துறைப் பகுதியில் நேற்று சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 945 கிராம் நிறையுடைய வலம்புரியை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக முச்சக்கரவண்டியில் கொண்டுசென்ற புளியங்குளம் மற்றும் கந்தளாய் பிரதேசங்களைச் சேர்ந்த 45 மற்றும் 49 வயதுகளையுடைய இருவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.