வவுனியா- இராசேந்திரங்குளம் பகுதியில் இருந்து துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக தேசிய புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலிற்கமைய நீதிமன்ற அனுமதியுடன், அப்பகுதிக்கு சென்ற வவுனியா பொலிஸார் மண் அகழ்வதற்கு பயன்படும் இயந்திரம் மூலம் நிலத்தை தோண்டி தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ரி56 ரக துப்பாக்கி மற்றும் 6 கைக்குண்டுகள் மற்றும் இரண்டு மகசின்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டுகள் விசேட அதிரடிபடையினரால் செயலிழக்க செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.