வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று மதியம் வாகனத்திலிருந்து அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த சோளன் வியாபாரி ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பட்டா ரக வாகனத்தில் நபரொருவரின் சடலம் உள்ளது என பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்த நபர் வாகனத்தில் சோளன் விற்பனைக்காக வந்த நிலையிலேயே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நபரின் மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.