வவுனியாவில் 78 பயிலுநர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைப்பு

0
227

சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கு
தொழில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 78 பயிலுநர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது..

அரசினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் முயற்சியின் அடிப்படையில் அதிமேதகு ஜனாதிபதி மேன்மைதாங்கிய கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் கீழ் வவுனியா மாவட்டத்தில் நேர்முக பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற 69 இளைஞர் யுவதிகளுக்கும், அதேபோன்று வெளியோயா பகுதியைச் சேர்ந்த 18 இளைஞர், யுவதிகளுக்கும் மொத்தமாக 78 பயிலுநர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ( வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் பிரதான காரியாலயத்தில் வைத்து கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

சமூக இடைவெளிகள் கவனத்தில் கொள்ளப்பட்டு சுகாதார வழிமுறைகளின் அடிப்படையில் இடம்பெற்ற குறித்த பயிலுநர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் சர்வமத தலைவர்கள் மற்றும் வவுனியா நகரசபை பிரதித் தவிசாளர் திரு.குமாரசாமி,வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை பிரதி தவிசாளர் திரு.மஹேந்திரன், வவுனியா நகரசபை உறுப்பினர்கள், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், பயிலுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.