கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து தேசிய வாசிப்பு மாதத்தின் முன்னிட்டு ஏற்பாடு செய்த ‘வாசிப்போம் அனுபவிப்போம்’ எனும் தொனிப்பொருளில் அமைந்த நூல் விபரண வேலைத் திட்டம் இன்று இடம்பெற்றது.
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இருந்து
மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் அனைவரும் தாங்கள் வாசித்த புத்தகத்தை பற்றிய கருத்தாடலை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதேச எழுத்தாளர்களான சிரேஸ்ட ஊடகவியலாளர் ரவிந்திரன, எழுத்தாளரும் அதிபருமான நா. நாகேந்திரன், இளம் எழுத்தாளர் ஆசிரியர் ப. அனேஜா ஆகியோரின்
பங்குபற்றியிருந்தனர்.
பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ப.ராஜதிலகன் மற்றும் பக்தகௌரி மயூரவதனன் ஆகியோர் இணைந்து இவ் நிகழ்வினை
ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.