வார இறுதி நாள்களில் பெரும் எண்ணிக்கையில் பொலிஸ் வீதித் தடைகள் ஏற்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் பயணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாள்களில் கூட்டங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என்பன நடத்தப்படுவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளுக்கும் இது பொருந்தும்.
பொது மக்கள் தமது நேரத்தை வீடுகளிலேயே கழிக்குமாறும், கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.