திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காதுறையில் உள்ள விகாரையின் விகாரதிபதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
லங்காதுறையில் உள்ள பக்வத விகாகரையின் விகாராதிபதியே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் தூக்கில் தொங்கிய நிலையில் விகாராதிபதியை சடலமாக மீட்டுள்ளனர்.
குறித்த விகாராதிபதியின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.