28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘விதையனைத்தும் விருட்சமே’ அமைப்பின் ஏற்பாட்டில்  சிறப்பாக இடம்பெற்ற இரத்ததான முகாம்!

விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஏற்பாட்டில்  இடம்பெற்ற10 வது இரத்ததான முகாம்
500 குருதிக்கொடையாளர்கள்
என்பதை கடந்து நிறைவு…

யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் இரத்ததான முகாம்களை நடத்திவரும் விதையனைத்தும் விருட்சமே அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 10 வது கொரோனா இடர்கால விசேட இரத்ததான முகாமில் 500 குருதிக்கொடையாளர்கள் என்ற இலக்கை எட்டியது…

விதையனைத்தும் விருட்சமே அமைப்பும் ; மாற்றத்துக்கான இளைஞர் பேரவையும் இணைந்து தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அணுசரணையில் உரும்பிராய் வடக்கில் அமைந்துள்ள கிராமிய உழைப்பாளர் சங்க அலுவலகத்தில்
ஆரம்பமாகிய 10 வது கொரோனா இடர்கால விசேட இரத்ததான முகாமானது தொடர்ந்தும் அமைப்பின் உறுப்பினர்கள் , சமூக ஆர்வலர்கள் , கிராமத்தவர்கள் மற்றும் குருதிக்கொடை நலன்விரும்பிகளின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்ற இரத்ததான முகாமானது
75 குருதிக்கொடையாளர்களுடன் நிறைவு கண்டது.

விதையனைத்தும்விருட்சமே அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 12 ம் திகதியே ஒரு வருடத்தை பூர்த்தி செய்யவுள்ள நிலையில் குறுகிய காலத்தில் துடிப்பான இளைஞர்களின் அர்ப்பணிப்பான செயற்பாட்டின் மூலம் மொத்தமாக 11 இரத்ததான முகாம்களை நடாத்தியதுடன் கொரோனா இடர்நிலையை கருத்தில்கொண்டு கொரோனா காலத்தில் விசேடமாக 10 இரத்ததானமுகாம்கள் வெற்றிகரமாக நடாத்திமுடிக்கப்பட்டுள்ளது.

நடாத்திய 11 இரத்ததான முகாம்களிலும் மொத்தமாக 624 குருதிக்கொடையாளர்கள் இரத்ததானம் செய்ததுடன் கொரோனா இடர்காலவிசேட 10 இரத்ததானமுகாம்களில் மட்டும் 524 குருதிக்கொடையாளர்கள் இரத்ததானம் வழங்கியுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles