கொரோனா தொற்று பரவல் காரணமாக மீன்களை விற்க முடியாத நிலையில் மீனவர்கள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்கள் களஞ்சியப்படுத்தி வைத்துள்ள அனைத்து மீன்களையும் அடுத்த நான்கு நாட் களுக்குள் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானி த்துள்ளது.
மினுவாங்கொடை கொரோனா கொத்தணிகை அடுத்து பேலியகொட மத்திய மீன் சந்தையில் கொரோனா தொற் றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களால் கொரோனா கொத்தணி தோன்றியது இதனால் மீன் அறு வடையை விற்பனை செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. அத்தோடு, மீன் பிடி துறைமுகங்களில் மீன்பிடி நடவடிக் கைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு விலை கொடுத்து கொள்வனவு செய்யும் மீன் களை எதிர்காலத்தில் மீன் ரின் உற்பத்திக்குப் பயன் படுத் தப்படும் என்றும் மீன் ஏற்றுமதி ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், பேலியகொட மத்திய மீன் சந்தை மீண்டும் திறக்கப்படுவதற்கான திகதி இன்னும் அறிவிக்கப் படவில்லை.