28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வீடு வீடாகச் சென்று மீன் விற்ற குடும்பத்துக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த தாயொருவர், அவரின் குழந்தைகள் மூவர் மற்றும் அவரின் சகோதரி ஒருவர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இந்தப் பெண்ணின் கணவர் இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார்.
அவர் கொழும்பு பேலியகொடை மீன் சந்தையில் மீன்களைக் கொள்வனவு செய்து வந்த நிலையில் அது தொடர்பில் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்காமல் பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை மூலம் இந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பின்னர் இந்த நபரின் உறவினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் அவர் திலகபுர மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களுக்கு சிறிய ரக லொறி மற்றும் ஓட்டோவில்; சென்று மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணும் வீடுகளுக்குச் சென்று மீன் விற்பனையில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது என பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இந்தப் பெண்ணிடம் மீன்களைப் பெற்றுக்கொண்டவர்கள் உடன் சுகாதாரப் பிரிவுக்கு தெரியப்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய நிலையில் இந்த பிரதேசம் உயர் அவதானம் கொண்ட பிரதேசமாக காணப்படுகிறது எனத் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles