மூன்று மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த 71 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமான், டுபாய் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியிருந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
நாட்டை வந்தடைந்த அனைவருக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனையடுத்து அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.