சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 21 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய வர்த்தகரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று இரவு 10.15 அளவில் இந்தியாவிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பின்னர் இவர் விமான நிலையத்தின் அனைத்து சோதனை நடவடிக்கைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்படும் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையில் சந்தேக நபர் கொண்டுவந்த பயணப்பொதியிலிருந்து 21 இலட்சம் ரூபா பெறுமதியான 21 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 105 சிகரெட்டு கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை எதிர்வரும் 22 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.