கொரோனா வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே, இன்னமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
அநுராதபுரத்தில் இன்றுகாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கொரோனாவால் இன்று பலரது வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல தொழில்கள் முடங்கியுள்ளன.
மீனவர்கள், ஆடைத்தொழில்சாலை ஊழியர்கள், சிறு கைத்தொழிலாளர்கள், நாளாந்த தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று ஒட்டுமொத்த நாடே பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்னமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.
இதுதொடர்பில் எதிர்க்கட்சி என்ற வகையில், ஒட்டுமொத்த மக்களுக்காகவும் நாம் குரல் கொடுப்போம் என அவர் தெரிவித்தார்.