வேலணையில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இடர் காலநிவாரணம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் Covid 19 தொற்றுக்குள்ளானவர்களின் குடும்பங்கள், மற்றும் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை பேணியதன் அடிப்படையில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கியதான 22 குடும்பங்களிற்குமான முதலாம், இரண்டாம் கட்ட உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு அரசினால் இடர்கால நிவாரண உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கான நிவாரணப் பொருட்கள் வழங்குதல் கடந்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட தனிமைப்படுத்தலுக்குப்பட்டுள்ளாக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.