கொரோனா வைரசிற்கு தீர்வு காணப்படும் வரை நாட்டை முடக்க தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசிற்கு உரிய தீர்வை காணும்வரை நாட்டை முடக்கிவைத்திருப்பது சாத்தியமில்லை என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊரடங்கினை பிறப்பிப்பதன் மூலம் மாத்திரம் மக்களின் நடவடிக்கைகளை தீர்மானிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றியபடி மக்கள் தங்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தயராகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டத்தினை கடுமையான நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாரை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.