ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, மட்டக்களப்பு ஏறாவூரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது கல்லெறித் தாக்குதல் நேற்றிரவு நடாத்தப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த வேளையே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.