ஹட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரோடு தொடர்புடைய 23 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபைத் தலைவர் சடையன் பாலச்சந்திரன் இன்று காலை தெரிவித்தார்.
பேலியகொடை மீன் சந்தையில் மீன் கொள்வனவு செய்த ஹட்டன் நகர மீன் விற்பனையாளர்களுக்கு கடந்த 23 ஆம் திகதி பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டதில் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந் நிலையில், ஹட்டன் மார்க்கட் பகுதி மூடப்பட்டதுடன் குறித்த நபருடன் தொடர்புடைய 23 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளபட்டது.
அதில் குறித்த நபரின் குடும்பத்தின் நால்வர் உற்பட மேலும் ஆறுபேர் அடங்களாக 10 பேருக்கு கொரோனை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஹட்டன் நகரை முழுமையாக மூடி கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சடையன் பாலச்சந்திரன் தெரிவித்தார்.