ஹற்றனில் 134 குடும்பங்களுக்கு இன்று உணவுப் பொதிகள் வழங்கல்

0
227

ஹற்றன் பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட 134 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ருபா பெறுமதியான உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்சத்தால் ஹற்றன் பொலிஸ் பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்ட 134 குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருள்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிவாரணப் பொதிகளை சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்கர் ஆர்.எம்.என்.ரன்வீர், ஹற்றன் பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகரும் நிலையப் பொறுப்பதிகாரியுமான சரத் பலிபான, ஹற்றன் டிக்கோயா நகரசபை சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.எஸ். மெதவல, அம்பகமுவ பிரதேச உதவிச் செயலாளர் எஸ்.எல்.லிந்தகும்புர ஆகியோர் வழங்கினர்.