24.6 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஹொரணையில் பெண்ணொருவர் படுகொலை

ஹொரணை பிரதேசத்தில் இன்று அதிகாலை சகோதரிகள் இருவர் தங்கியிருந்த வீட்டுக்குள் முகத்தை மூடியபடி நுழைந்த இனந்தெரியாத இருவர் வீட்டின் படுக்கையில் இருந்த சகோதரிகளில் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹொரணை மேவனபலன சிரில்டன் வத்தை உடகந்த பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ரமணி சகுந்தலா என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 படுகொலை செய்யப்பட்ட பெண் பங்களாதேஷ் பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொண்டவர் எனவும் அவர் தற்போது தனது தங்கையுடன் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 இங்கிரிய ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான இளைய சகோதரியும் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த வீட்டில் தங்குவதற்காக வந்துள்ளதுடன் இருவரும் உறங்கச் சென்றமை சகோதரியின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது. நேற்று இரவு (10) கதவுகள் மூடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண் தனது சகோதரி தூங்கும் சமையலறைக்கு அருகில் உள்ள அறையில் தரையில் தூங்கிக் கொண்டிருந்த போது இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles