பாராளுமன்ற தேர்தல் வேட்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளருமான, அஷ்ரப் தாஹிரை ஆதரித்து நிந்தவூர் பிரதான வீதியில் கட்சியின் மாவட்ட தேர்தல் பணிமனை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிந்தவூர் மத்திய குழு ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.