இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்து வழக்கு தொடர்ந்துள்ளது.
தொழிலதிபர் அதானி சூரிய சக்தி மின்திட்டம் ஒப்பந்தங்களை 25 கோடி டொலர்கள் இலஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு கொடுத்து பெற்றுள்ளார். அதில் அமெரிக்கர்கள் முதலீடு செய்ய வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தியுள்ளார் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது.
2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில், சூரிய சக்தி மின்திட்ட ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 25 கோடி டொலர்கள் இலஞ்சம் அதானி கொடுத்துள்ளார்.