அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் 40 வீதம் அதிகரிப்பு

0
95

நீண்ட விடுமுறை காரணமாக அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பெறப்பட்ட வருமானம் சுமார் 40 வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 22ஆம் திகதி மாத்திரம் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 791 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரே நாளில் 4 கோடியே 64 இலட்சத்து 57 ஆயிரத்து 600 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக ஒரே நாளில் பெறப்பட்ட அதிகூடிய வருமானம் இதுவாகுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.